மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இ.பி.எஸ் இன்று வெளியிட்டார்.
ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கிறது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.டி.ஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.கவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இ.பி.எஸ் வெளியிட்டார்.
வடசென்னை – ராயபுரம் ஆர்.மனோ
தென்சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.என்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – கவிமணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் – சந்திரகாசன்
நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
தேனி – வீ.டி.நாராயணசாமி
மதுரை – டாக்டர் சரவணன்
ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள்
இந்நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இ.பி.எஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“