/tamil-ie/media/media_files/uploads/2022/09/DGP200.jpg)
DGP Sylendra babu
கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாஜக அலுவலகம், அக்கட்சி நிர்வாகிகளின் வீடுகள், கார் மற்றும் கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி உள்ளிட்ட 6 இடங்களில் கெரசின் குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே உளவுத்துறை உதவி கமிஷனர் முருகவேல் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோவையில், பாதுகாப்பு பணிகளை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன், மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் மேற்பார்வையிட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-24-at-3.35.48-PM.jpeg)
இந்நிலையில், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், பார்த்திபனை நியமித்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர் பணிந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைச்செயலகத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.