பொதுக்குழு டு அறிவாலயம்: பசியை மறந்து வந்த ஸ்டாலின்; நெகிழ்ந்த நிர்வாகிகள்

அப்போது மணி 2.15. அவர் நினைத்திருந்தால் இல்லத்தில் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து மாலை கூட அறிவாலயம் வந்திருக்கலாம். ஆனால் தலைமை கழகம் தான் தாய்வீடு என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அறிவாலயத்துக்கு வருகை புரிந்தது தலைமை நிலைய நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
M K Stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 பொதுக்குழுவில் இரண்டாம் முறையாக தலைவராக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். பொதுக்குழு முடிந்த கையோடு நேராக சென்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தி நேராக கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வருகை புரிந்தார்.

Advertisment

 பொதுக்குழுவில் இருந்து திரும்பி, தலைவராக வரவேற்பதற்காக அறிவாலயத்தில் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைமை நிலைய நிர்வாகிகள், தொண்டரணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் அறிவாலய ஊழியர்கள் ஸ்டாலினுக்காக காத்திருந்தனர். அறிவாலயத்துக்கு வருகை புரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அவருடனேயே வந்த துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் காத்திருந்த தலைமை  நிலைய நிர்வாகிகள் ஆகியோர் ஸ்டாலினுக்கு முதல் நபராக வாழ்த்து தெரிவிக்க, அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

அப்போது மணி 2.15. அவர் நினைத்திருந்தால் இல்லத்தில் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து மாலை கூட அறிவாலயம் வந்திருக்கலாம். ஆனால் தலைமை கழகம் தான் தாய்வீடு என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அறிவாலயத்துக்கு வருகை புரிந்தது தலைமை நிலைய நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: