சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையம் என பயணிகளின் வசதிக்காக 2 தனித்தனி முனையங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்
விமான நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களைப் பெற 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்து இறங்கும் பயணிகள் பேக்கேஜ் க்ளைம் பாயின்ட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களில், பல்வேறு இடங்களிலிருந்து, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கன்வேயரில் இருந்து லக்கேகேஜ்களை எடுத்துச் செல்ல 1 முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக கூறுகின்றனர். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் பயணிகளின் அனுபவம் மேம்படவில்லை என பயணிகள் கூறுகின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து சென்னை வந்த பயணி சந்தியா என்பவர் கூறுகையில், நான் புதிய முனையம் வழியாக வந்தேன். இருப்பினும் நான் பைகளுக்காக 2 மணி நேரம் காத்திருந்தேன்.
பேக்கேஜ் பெல்ட் அருகில் உட்கார நாற்காலி கூட இல்லை. வயதானவர்கள் ட்ராலியில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். இது மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் அதிகாலை 2.10 மணிக்கு தரையிறங்கினேன். ஆனால் 4 மணிக்குத்தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது என்று கூறினார்.
குடிவரவு சோதனை வேகமாக இருந்தது, ஆனால் லக்கேஜ்களுக்கு காத்திருப்பது சிரமமாக உள்ளது
ன்று அவர் மேலும் கூறினார். பலர் தங்களது சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் கூறுகையில், மற்ற விமானங்களுக்கு செல்ல காத்திருக்கும் போதும் லக்கேஜ்கள் கொடுக்க தாமதம் ஆகிறது. சில விமானங்கள் முனையத்தில் இருந்து தொலைவில் இருப்பதால் அங்கிருந்து எடுத்து வர தாமதமாகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சில நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் பயணிகளின் பைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. இது டெர்மினலின் அடித்தளத்தில் பல பைகளை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும் போது ஸ்கேனிங் செயல்முறையை மெதுவாக்குகிறது என்று கூறினார்.
இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பைகளை அனுப்புவதில் தேவையற்ற காலதாமதம் இல்லை. விமான நிலையத்தில் பைகளை சரிபார்க்க புதிய
நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“