Passengers safety committee inspects Trichy Railway Junction: திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஜெயந்திலால் ஜெயின், பிரமோத் குமார்சிங், மோகன்லால் ஆகியோர் தலைமையிலான குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும் வகையில் வசதிகள் உள்ளதா? பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்று ஆய்வு நடத்தி பயணிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் ரயில் தண்டவாளத்தையும் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நிலைய மேலாளர் அலுவலகத்திற்குச் சென்று பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கவேண்டிய நல்லுறவுகள் குறித்து அறிவுரை வழங்கினர்.
இதையும் படியுங்கள்: மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
பின்னர் திருச்சி முதல் தஞ்சை வரையிலான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்கவும், திருச்சியிலிருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்குவது உள்ளிட்ட திருச்சி பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளை 27-ம் தேதி டெல்லியில் நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயகர்ணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil