தேவர் சிலை தங்கக்கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்கக் கவசம் வங்கியில் உள்ளது. அந்த தங்கக்கவசத்தை பெறுவதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோர் பெயரில் வங்கி லாக்கரில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு மாலை நான்கு மணிக்கு ஒத்தி வைத்து பின்னர் 4.45 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"