‘பாரதி பாஸ்கர் நல்லா இருப்பதாக டாக்டர் சொன்னாங்க… அனைவரும் பிரார்த்திப்போம்!’: பட்டிமன்ற பேச்சாளர் ராஜா

பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கர் உடல்நிலை நலமாக இருப்பதாக அவருடைய நண்பரான ராஜா கூறியுள்ளார்.

bharathi baskar

பட்டிமன்ற ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் மிக நேர்த்தியாக பேச கூடிய மிக சிறந்த பேச்சாளர் பாரதி பாஸ்கர். பிரபல முன்னணி தனியார் வங்கி ஒன்றில் மூத்த ஊழியராக முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திடீரென இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாரதி பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பாரதி பாஸ்கர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் தமிழ் விரும்பிகளும் பட்டிமன்ற அபிமானிகளும் பிரார்த்தித்து வருகிறார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் பாரதி பாஸ்கரின் சக பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் நலம் விசாரித்திருக்கிறார். இது தொடர்பாக ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாரதி பாஸ்கரின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் கேட்டேன். நல்லா இருப்பதாக சொன்னாங்க. அவர் விரைவில் நலம் பெற அனைவரும் பிரார்த்திப்போம்!’ என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pattimandram fame raja about bharathi baskar health condition

Next Story
News Highlights: தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்Finance minister PTR Palanivel Thiaga Rajan, white paper on Tamil Nadu Government's finances,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express