பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டிமன்றங்கள் மூலமே புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா, ராஜா உள்ளிட்டவர்களுடன் பட்டிமன்றங்களில் பங்கேற்று வருபவர் பாரதி பாஸ்கர். இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்ததோடு எம்பிஏ படிப்பும் படித்துள்ளார். உலகின் முன்னனி தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். வங்கிப் பணிகளுக்கிடையே பட்டிமன்றங்களில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார். மெல்லிய நகைச்சுவை மற்றும் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இவரது ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாரதி பாஸ்கருகு இன்று தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.
பாரதி பாஸ்கருக்கு நேற்று மதியத்திற்கு மேல் கடுமையான தலைவலியும் வாந்தியும் ஏற்பட்டிருக்கு. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மூளையில் ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் உள்ளதாகவும், அதனை சரி செய்வதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், பாரதி தற்போது மயக்க நிலையில் இருப்பதாகவும், விரைவில் கண்விழித்து, சில நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற்று வர அவரது நண்பகர்களும், தமிழ் உணர்வாளர்களும், ரசிகர்களும் வேண்டி வருகின்றனர். பாரதிக்கு பாஸ்கர் லட்சுமணன் என்ற கணவனும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil