தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் மாயமான ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
Advertisment
இந்த ஆலயத்தில் 3000 ஆண்டு கால பழைமையான கல் சிலை 2019 ஆம் ஆண்டு திருடப்பட்டதாக புகார் காவல் நிலையத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், சிலை கடந்த தடுப்பு பிரிவிற்கு கடந்த 202 ஆம் ஆண்டு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆலயத்தின் உட்பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தம்பி குளம் சின்ன தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை விசாரணை செய்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவரது கூட்டாளி மிக நுணுக்கமாக திட்டமிட்டு கொள்ளையடித்து பண ஆதாயத்திற்காக வெளிநாட்டிற்கு சிலையை அனுப்பி வருவதாகவும் வாக்குமூலமாக நீலகண்டன் அளித்தார்.
இதையடுத்து, இரண்டாவது குற்றவாளியான மணிகண்டனையும் தேடி வந்தோம். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலூரில் மணிகண்டனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குழு கைது செய்தனர்.
ஆஞ்சநேயர் சிலை மீட்பு செய்தியாளர் சந்திப்பு
அவர்களிடமிருந்து ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது 300 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்தது. அதனை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.
அதில் நீலகண்டன் என்பவர் ஜோசியம், குறி பார்த்து வருவதாகவும் அவ்வாறு அந்த கோவிலுக்கு சென்று அந்த சிலையை திருடியுள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும் போலீசார், “இந்தாண்டு மட்டும் உலோக சிலை, கல் சிலை உள்ளிட்ட 248 காணாமல் போன பொருட்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் மீட்கப்பட்டுள்ளது. இது தவிர சிலை கடத்தல் தொடத்பாக 62 வழக்குகள் இந்தாண்டு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/