/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-16.jpg)
paul dhinakaran home it raid : மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவருக்கு தமிழகம் உள்பட உள்நாடு, வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.
பால் தினகரன் ஏசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருகிறார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.