பால் தினகரன் வீடு, நிறுவனங்களில் சோதனை: சிக்கியது என்ன?

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 4.5 கிலோ தங்கம் மற்றும் 120 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

By: Updated: January 24, 2021, 07:10:50 AM

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 4.5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் கணக்கில் வராத 120 கோடி ரூபாய் பணமும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் (ஜனவரி 20-ந் தேதி முதல்) கடந்த 3 தினங்களாக வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  மேலும்,  இஸ்ரேல், சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் அமைந்துள்ள அவரது நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளையும் வரி மோசடிகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனையில், கணக்கில் வராத 200 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூரில், செயல்பட்டு வரும்  கவ்வி நிறுவனமான கருண்யா கல்லூரியின் முதல்வராக  பால் தினகரன் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இயேசு அழைக்கிறார் என்ற அலுவலகம் மற்றும் அதன் வலைத்தளத்திலும் பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் போதனைகள் மூலம் அதிகமாக சம்பாதித்துள்ளார். ஆனால் தான் சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கணக்கு காண்பிக்காமல் அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்த வருமான வரி சோதனை குறித்து விளக்கம் அளிக்க பால் தினகரன் அடுத்த வராம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பால் தினகரன் கனடாவில் குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Paul dinakran income tax raid gold and black money confiscate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X