விபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இந்தோனேசிய பெண்ணை விபச்சார வழக்கில் கைது செய்து அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட அவருக்கு தமிழக அரசு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் பணியாற்றியவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண். கடந்தாண்டு அக்டோபர்…

By: January 5, 2019, 1:03:46 PM

மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இந்தோனேசிய பெண்ணை விபச்சார வழக்கில் கைது செய்து அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட அவருக்கு தமிழக அரசு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் பணியாற்றியவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண். கடந்தாண்டு அக்டோபர் மாதம் நீலாங்கரை ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் திடீரென்று மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர்.

அப்போது, அதன் உரிமையாளார் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு, இந்தேனேசியாவைச் சேர்ந்த பெண் உள்பட அங்கு பணியாற்றியவர்களை கைது செய்து மயிலாப்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தோனேசிய பெண்ணுக்கு 2.5 லட்சம் இழப்பீடு

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீலாங்கரை ஆய்வாளருக்கு உத்தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று தங்களை விடுவிக்கக் கோரி மற்ற பெண்களும் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும், தங்களது மீதான விபச்சார வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மசாஜ் சென்டர் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், மசாஜ் என்பது அறிவியல் பூர்வமான சிகிச்சை முறை என்றும், ஆதிகாலம் முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், ஹெல்த் ஸ்பா என்ற மசாஜ் செண்டர்களை சட்டவிரோதம் என கூறுவது ஏற்புடையதல்ல, அதே போல் ஒரு பாலினத்தவர் மற்றொரு பாலித்தவர்களுக்கு ஸ்பா மசாஜ் கொடுப்பதற்காக கைது செய்வது முறையல்ல என்றும் கூறி இந்த வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் 26 நாட்கள் பணிக்கு விடாமல் காப்பகத்திலேயே வைக்கப்பட்ட இந்தோனேசியா பெண்ணுக்கு தமிழக அரசு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Pay rs 2 5 lakh to indonesian massage therapist for wrongly detaining her madras hc to police

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X