scorecardresearch

”பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்க வேண்டாம்” : கே. பாலகிருஷ்ணன்

பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடரக்கூடாது என்று சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

”பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்க வேண்டாம்” : கே. பாலகிருஷ்ணன்

பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடரக்கூடாது என்று சி.பி.எம்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பணிகளை போற்றும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பேசிய வீடியோ சர்ச்சையானது.  இந்நிலையில் இது தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கோ. பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது “ என்ன விரும்புகிறோம் என்றால் கலைஞருக்கு நினைவுச் சின்னம் வைக்கக்கூடாது என்பது எங்கள் கருத்தல்ல. ஒரு பொது இடத்தை தேர்வு செய்து வைக்கலாம். ஆனால் கடலுக்குள்ளே வைப்பது ஒரு சர்ச்சையை உருவாக்குகிறது. இதனால் கடலுக்குள் நினைவுச் சின்னம் வைக்க வேண்டாம், அதற்கான பணிகளை தொடர வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pen statute for karunanidhi cpm opposes

Best of Express