நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் நக்சலைட்டுகள் மற்றும் ஜிஹாதிகள் : அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு!

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பாஜக பிரமுகர் அர்ஜுன் சம்பத் நீட் தேர்வு எதிர்ப்பவர்களை நக்சலைட் மற்றும் ஜிஹாதிகள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பாஜக பிரமுகர் அர்ஜுன் சம்பத் நீட் தேர்வு எதிர்ப்பவர்களை நக்சலைட் மற்றும் ஜிஹாதிகள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet arjun sampath

தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கைக்கு எதிராக பசுமைச்சூழல் சிதைவடையும் நிலை உள்ளதால் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நடத்தும் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது நீர் தேர்வினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர்,

Advertisment

“தமிழகம் முழுக்க பரவலாக நீட் தேர்வு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். அதில் சுமார் 1500 பேருக்கு வெளி மாநிலங்களிலே அவர்கள் தேர்ந்தெடுத்தது போலவே மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தான் இந்தத் தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் இந்த நீட் தேர்வு விவகாரத்திலே தனியார் மருத்துவக் கல்லூரிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்ற காரணத்தினால், இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ படிப்பை தொடர்ந்து வியாபாரமாக்க முயற்சிப்பதால், அவர்களின் வியாபாரத்திற்கு இந்த நீட் தேர்வு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி நீட் தேர்வுக்கு எதிராக நக்சலைட்டுகளையும், எதிர்க்கட்சிகளையும் தூண்டி விட்டு பல்வேறு விதமான அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். கம்யூனிஸ்டுகளை தூண்டி விடுகிறார்கள். கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் நீட் தேர்வை நடுத்துகிறார்கள். நாடு முழுவதும் நீட் தேர்வு வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே நக்சலைட்டுகளும் மற்றும் ஜிஹாதிகள் முஸ்லீம் அமைப்புகள் ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தைத் தனி நாடாக ஆக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். காவிரி, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகளில் ஊடுருவிப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் நீட் விவகாரத்திலும் தற்போது அவதூறு பரவி வருகிறார்கள்.”

Advertisment
Advertisements

என்று பேசியுள்ளார்.

Arjun Sampath

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: