Advertisment

தடையை மீறி காசிமேடுவில் மீன் வாங்க குவிந்த மக்கள்; காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று பெரிய அளவில் பொதுமக்கள் குவிந்ததால் தொற்று மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் சுகாதாரத்துறையினரிடம் எழுந்துள்ளது.

author-image
WebDesk
Apr 11, 2021 22:00 IST
New Update
people crowd gathering at kasimedu fish market, சென்னை, காசிமேடு மின் சந்தை, காசிமேடு, பொதுமக்கள் கூட்டம், கொரோனா வைரஸ், People flocking to Kasimedu, coronavirus

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வான்வதற்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் 2 ஆயிரத்துக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. அதே போல, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோன தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிற நிலையில்ல், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்தனர். பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டமாகக் குவிந்தனர். பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மீன் வாங்குவதற்கு கூட்டமாக திரண்டுவந்தனர். இதனால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும், கடலில் மீன்கள் இனப்பெருக்க காலத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலம் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் பொது மக்கள் வார இறுடி நாளான ஞாயிற்றுகிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிவதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று பெரிய அளவில் பொதுமக்கள் குவிந்ததால் தொற்று மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் சுகாதாரத்துறையினரிடம் எழுந்துள்ளது.

#Chennai #Tamilnadu #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment