ஆறு மாதங்களுக்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியால் துரைப்பாக்கத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க இந்த பூங்கா கட்டப்பட்டதால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பூங்காவில் அமைக்கப்பட்டவை துருபித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காலை நடைபயிற்சி செய்ய இடமில்லாமல் முதியவர்கள், பெண்கள் அவதிப்படுவதால், பூங்காவை திறந்து பொதுமக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.
அருகிலேயே ஆனந்த் நகர் மற்றும் சாய் நகர் என இரண்டு பூங்காக்கள் உள்ளன. ஆனந்த் நகர் பூங்கா விநாயக நகரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதால், பெரும்பாலான முதியோர்கள் நடைபயிற்சிக்காக பூங்காவிற்கு செல்ல தயங்குகின்றனர்.
பல்லாவரம் ரேடியல் ரோட்டின் குறுக்கே சாய்நகர் பூங்கா உள்ளதால், சாலையை கடந்து யாரும் செல்வதில்லை. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நெருங்கி வருவதால், குழந்தைகள் நேரத்தை செலவிட விநாயக நகர் பூங்கா சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil