நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர், திடீரென தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தோர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கட்சி மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். நாகை ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்