Advertisment

அண்ணா முதல் ரஜினி வரை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பற்றிய சின்ன ரீவைண்ட்

தமிழ் திரையுலகிலிருந்து அரசியலில் இறங்கி அதன் ஆழத்தை பார்த்த, பார்க்காதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அண்ணா முதல் ரஜினி வரை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பற்றிய சின்ன ரீவைண்ட்

ரஜினியின் ரசிகர்கள் கால் நூற்றாண்டாக காத்திருந்த கை அசைவு வெற்றி முத்திரையாக அவர்களுக்கு காண கிடைத்திருக்கிறது. தமிழகம் இதுவரை சினிமாவிலிருந்து 4 முதலமைச்சர்களை கண்டுள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இவர்கள் இல்லாமல், அரசியலில் சிறிய மாற்றம் முதல் பெரும் மாற்றங்கள் வரை நிகழ்த்திக் காட்டியவர்களாகவும் திரை பிரபலங்களே உள்ளனர். அப்படி, தமிழ் திரையுலகிலிருந்து அரசியலில் இறங்கி அதன் ஆழத்தை பார்த்த, பார்க்காதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை பார்க்கலாம்.

Advertisment

அண்ணா:

publive-image

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா, நீதிக்கட்சியில் இணைந்து நாத்திகம், ஆரியர்கள் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு ஆகியவற்றிற்காக பணியாற்றினார். அதன்பின், தேர்தல் அரசியலுக்கு எதிராக நின்ற பெரியாரிடமிருந்து விலகி 1949-ல் திமுகவை ஆரம்பித்தார். வேலைக்காரி, ஓர் இரவு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் அண்ணா. 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று, அண்ணா முதலமைச்சரானார்.

கருணாநிதி:

publive-image

பராசக்தி, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி, திரைப்படங்கள் மூலம் திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். பின், அண்ணாவின் மறைவுக்கு பின் முதன்முறையாக 1971-ஆம் ஆண்டு முதலமைச்சரான கருணாநிதி, 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

எம்.ஜி.ஆர்:

publive-image

திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் திமுகவை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முக்கிய ஊடகமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். 1950களிலிருந்து 1972 வரை திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர்., அதன்பிறகு கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவை ஆரம்பித்து 1977-ஆம் ஆண்டு முதல் 1987 வரை முதலமைச்சராக இருந்து காலமானார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன்:

publive-image

வசீகரிக்கும் அழகு, அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு மூலம் நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். திராவிட கொள்கைகள் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, ஈரோட்டில் ‘சந்திரோதயம்’ நாடகம் நடத்த வந்த அண்ணாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், திமுகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். 1962-ஆம் ஆண்டு தேனி சட்டமன்ற தொகுதியிலிருந்து திமுக சார்பாக எம்.எல்.ஏ-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலேயே எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். அதன்பின், திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். விலகி அதிமுகவை ஆரம்பித்தபோது, தானும் விலகி அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். 1980-ஆம் ஆண்டில் அதிமுக சார்பாக ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். அதன்பின், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல்போகவே, அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்கிக்கொண்டார்.

சிவாஜி கணேசன்:

publive-image

திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி கணேசன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் சென்றார் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அதன்பின், திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சி அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி அளித்தது. அதன்பின், 1987-ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். 1989-ஆம் ஆண்டு ஜானகி அணியுடன் இணைந்து அக்கட்சி 50 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. சிவாஜி கணேசனும் தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் போட்டியிட்டும் பெரும் தோல்வியை அடைந்து தீவிர அரசியலிலிருந்து விலகினார்.

ஜெயலலிதா:

publive-image

நடனம், நடிப்பு, என பல திறமைகள் மூலம் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா 1981-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குபின் அதிமுக ஜெயலலிதா, ஜானகி ராம்ச்சந்திரன் தலைமையில் இரு அணிகளாக பிரிந்தது. அதன்பின், ஜெயலலிதா கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றினார். 6 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்.

விஜயகாந்த்:

publive-image

தன் திரைப்படங்களில் திமுக ஆதரவு வசனங்கள் மூலம் அரசியல் சார்பெடுத்தவர் விஜயகாந்த். 2005-ஆம் ஆண்டு தேமுதிகவை ஆரம்பித்தார். அதன்பின், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அக்கட்சி சார்பாக மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணியமைத்த தேமுதிக, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 2016-ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக ஓரிடத்தைக் கூட பிடிக்காமல் பெரும் தோல்வியை சந்தித்தது.

சரத்குமார்:

publive-image

சரத்குமார் 2002-ல் மாநிலங்களவை திமுக உறுப்பினராக பதவி வகித்தார். 2006-ஆம் ஆண்டு திமுகவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, 2007-ல் அகில இந்திய சமத்துவ கட்சியை ஆரம்பித்தார்.

டி.ராஜேந்திரன்:

publive-image

திமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த டி.ராஜேந்திரன் 1996-ல் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். அதன்பின் 2004-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி லட்சிய திமுகவை ஆரம்பித்தார்.

கார்த்திக்:

publive-image

2006-ஆம் ஆண்டு அனைத்திந்திய ஃபார்வார்டு மக்கள் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்ற இவர், தற்போது அகில இந்தியா நாடாளும் மக்கள் கட்சியை துவங்கியுள்ளார்.

பாக்யராஜ்:

publive-image

எம்.ஜி.ஆரின் மீது தீராத அன்பு கொண்டிருந்த நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த அவர், அக்கட்சி தேர்தலை சந்திக்காமலே போனது. அதன்பின், அதிமுகவில் சிறிதுகாலமும், திமுகவில் சிறிதுகாலமும் இருந்து பின்னர் அரசியலில் இருந்து விலகிவிட்டார்.

Mgr Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment