கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்து விசில் ஊதி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாவட்ட சிறப்பு கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக 6000 ரூபாய் வழங்க வேண்டும், அரசு வேலையில் காது கேளாதோர் வாய் பேசாதோர்க்கு 1% இட ஒதுக்கீடு தர வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கு வாட்ஸ் அப் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
மனு அளிக்க வந்த அவர்கள் விசில் ஊதியும் தரையில் அமர்ந்து கைகளை உயர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“