scorecardresearch

37ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: மேயரிடம் கோரிக்கை

கோவை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மேயர் கல்பனா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் அனுசரிக்கப்படும்.

கோவை

கோவை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மேயர் கல்பனா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் அனுசரிக்கப்படும்.

அந்த வகையில் இன்று காலை முதல் மதியம் வரை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் இக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.இதில், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாலை, தெருவிளக்கு, குடிநீர், சொத்து வரி, புது குடிநீர் இணைப்பு, கல்வி போன்ற பல அடிப்படை தேவைகள் பற்றி  பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளனர்.

அதில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதில் கடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் தற்போது சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது.

அதேபோல் வடிகால் வசதி, குடிநீர் வசதி என போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.இப்பகுதியில் உள்ள ரிசர்வ் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்

இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனர்.மேலும் இது குறித்து 3 முறை மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: People without basic need complaints to mayor kovai