பெரம்பலூர் விபத்து : ஓட்டுனர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் உட்பட 9 பேர் பலி!!!

பெரம்பலூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுனர் ஒருவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்பில் மோதியதில். இதில் தடுப்பில் மோதிய கார், முழு கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறத்தின் எதிரில் வந்த கார் மீது மோதியது.

இந்தச் சம்பத்தில் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த ஓட்டுனர் ஒருவர் மற்றும் விபத்துக்குள்ளான காரில் இருந்த குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பலியானோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close