பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா? உண்மை இது தான்

மத்திய தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்தன

By: October 23, 2020, 11:02:22 AM

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைத்த ‘டைனோசர் முட்டை’ படங்கள் வியாழக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. ஆனால் அந்த பகுதிக்கு வருகை தந்த உள்ளூர் புவியியல் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் குழு, அவைகளை அம்மோனைட் வண்டல் என அடையாளம் கண்டுள்ளது.

பப்ஜி விளையாட 7.5 லட்சம் திருடிய சென்னை சிறுவன்

அம்மோனைட் (அம்மோனாய்டுகள்) என்பது டெவோனிய காலத்தில் (சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) எழுந்த ஒரு பெரிய மாறுபட்ட கடல் இனங்கள்.

குன்னத்தின் நீர்நிலைகளில் அம்மோனைட் வண்டல்கள் கண்டறியப்பட்டது. “கடல் இனங்கள் பல நூற்றாண்டுகளாக ஒத்திசைவு செயல்பாட்டில் சிக்கியிருக்க வேண்டும். இது டைனோசர் முட்டை என்று தவறாக கருதப்பட்டது” என்று குழுவை வழிநடத்திய ரமேஷ் கருப்பையா கூறினார். இன்றைய மத்திய தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்தன என்றார் அவர்.

அந்த குழுவில் ’கல்மரம் காப்போம், மற்றும் ’மண்ணின் மைந்தர்கள்’  ஆகிய குழுக்களின் உறுப்பினர்கள் இருந்தனர். குன்னத்தின் வடகிழக்கு பக்கத்தில் உருவாகும் வெள்ள நீரோட்டமான ஆனைவாரி நீரோட்டத்தில், புதைபடிவ மரத்தின் ஒரு பகுதியையும் இந்த குழு அடையாளம் கண்டது.

பாரம்பரிய சுவையுடன் வத்தக் குழம்பு: எளிதான செய்முறை இங்கே!

அந்த புதைபடிவம் ஏழு அடி நீளம் மற்றும் 30 அங்குல தடிமன் கொண்டது. “பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற புதைபடிவ மரங்களும் அம்மோனைட்டுகளும் காணப்பட்டன. கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அருங்காட்சியங்களுக்கு மாற்றும் போது,  புதைபடிவங்கள் சிதைந்து போகக்கூடும்.” என இந்திய புவியியல் ஆய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Perambalur dinosaur eggs are verified as ammonite sediments

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X