/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-design.png)
Perambalur DMK MLA tested covid19 positive: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரே சீராக அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்ற சூழ்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோல செய்தியாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்கும் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தடுப்பூசிகளின் ஆயுட் காலம்
கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான, திமுகவை சேர்ந்த பிரபாகரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை தமிழக பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.