பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஃபீஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று மாலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டார பகுதிகளான தளுதாழை, அரும்பாவூர், அ.மேட்டூர், கொட்டாரகுன்று, மலையாளப்பட்டி, சின்னட்டுலு, கோரையாறு, பூஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான மக்காச்சோள வயல்களில் சோளம் கருதுகளுடன் சாய்து நாசமானது.
தொடர்ந்து சாய்ந்த சோளம் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரால் அழுகும் சூழல் நிலவுவதால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கவிருக்கின்றனர். இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“