Advertisment

உடல் உறுப்பு தானம் செய்த துப்புரவு பணியாளர்: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெரம்பலூர் மாவட்டம் விசுவகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு மூளை சாவு ஏற்பட்டதால், அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Perambalur Sanitation Worker Organ donors funeral conducted with state honours in TN Tamil News

உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Perambalur: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவகுடி கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கிருஷ்ணன் (58). தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த அவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணன் கடந்த 19 ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் கீழே விழுந்து மயக்கமடைந்தார். 

இதனையடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 உதவியுடன் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி அரசு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி தனலட்சுமி (52) முன்வந்தார். 

உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று திங்கள்கிழமை (22 ஆம் தேதி) விசுவகுடியில் கிருஷ்ணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் சு.கோகுல் கலந்துகொண்டு கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Perambalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment