சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்: வீடியோ வைரலாகியதால் கைது

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் குழந்தைவேலுவை அவரது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியதைடுத்து, கைகளத்தூர் போலீசார் மகன் சக்திவேலுவை கைது செய்தனர்.

பெரம்பலூர் அரிசி ஆலை அதிபர் குழந்தைவேலுவை அவரது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியதைடுத்து, கைகளத்தூர் போலீசார் மகன் சக்திவேலுவை கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
perambalur son arrested after video went viral of attacking his own father businessman kuzhanthaivelu property dispute Tamil News

பெரம்பலூரில் சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்... வீடியோ வைரலாகிய நிலையில் மகன் சக்திவேல் கைது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

க.சண்முகவடிவேல்

Perambalur: பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல். இவர் அரிசி ஆலை நடத்தி வந்துள்ளார். இவரது மகன் சக்திவேல் தனது தந்தையிடம் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு தகராறு செய்துள்ளார். குழந்தைவேல் சொத்தை பிரித்துக் கொடுக்க மறுக்கவே, அவரது மகன் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி தனது தந்தையை வீட்டு வாசலில் வைத்து பலமாக தாக்கினார். 

Advertisment

இதில் பலத்த காயமுற்ற குழந்தைவேல் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். தந்தை மகனுக்குமான பிரச்சனை, குடும்ப விவகாரம், சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்கிறோம் என உறவினர்கள் சொன்னதால் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அந்த வழக்கை முடித்து வைத்தனர். திருச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைவேல் சிகிச்சை முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்பியவர் மன உளைச்சலில் இருந்திருக்கின்றார். 

இந்த நிலையில், குழந்தைவேல் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்திருக்கின்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்ததில், அவரது மரணம் இயற்கை மரணம் என்பதை உறுதி செய்த பின்பு போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரணை செய்தனர். அதன் பின்பு குடும்ப வழக்கப்படி அவரது இறுதி காரியங்கள் நடை பெற்றாலும், வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்த சூழலில், அரிசி ஆலை அதிபர் குழந்தைவேலுவை அவரது மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கைகளத்தூர் போலீசார் அவரது மகன் சக்திவேலுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், இயற்கை மரணம் என்ற வழக்கையும் கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

Advertisment
Advertisements

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ அவர் இறந்த பிறகு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியதால் சக்திவேல் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Perambalur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: