Advertisment

கூலிப்படையை ஏவி மனைவி கொலை: கணவன் உட்பட 7 பேர் கைது

பெரம்பலுார் அருகே எளம்பலுாரில் மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Perambalur Wife killed by koolipadai seven including husband arrested Tamil News

பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கூலிபடை வைத்து கொலை செய்த கணவன் ராஜ்குமார், அவரது அண்ணி ஆனந்தி மற்றும் கூலிப்படையினர் 5 பேர் என 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

க.சண்முகவடிவேல்.

Advertisment

Perambalur: பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். விஜயகோபாலபுரத்தில் உள்ள டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மனைவி பிரவீனாவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

ராஜ்குமாருக்கு வேறு சில பெண்களுடன் தகாத உறவு ஏற்பட்டதால், கணவன் - மனைவி கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகளை ராஜ்குமார் சிறுவயலுாரில் உள்ள பாட்டி வீட்டில் விட்டு வந்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவுப் பணிக்காக சென்ற ராஜ்குமார், மனைவியை சித்தப்பா வீட்டில் விடுவதாக கூறி பைக்கில் அழைத்துச்சென்றுள்ளார். 

செல்லும் வழியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான வயல் வெளியில் பைக்கை நிறுத்தி தான் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையை வைத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், மர்ம கும்பல் தன்னையும் தாக்கியதாகவும், மனைவியை கொலை செய்து விட்டு தப்பித்ததாகவும் போலீல் விசாரணையில் கூறியிருக்கிறார். 

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். எஸ்.பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி பழனிசாமி மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ராஜ்குமாரிடம் தொடந்து நடத்திய விசாரணையில், ராஜ்குமாருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 

இதில் ராஜ்குமாரின் கள்ள உறவுக்கு அவரது அண்ணன் செந்தில்குமார் மனைவி ஆனந்தி ஆதரவாக இருந்துள்ளார். இதனால் ராஜ்குமாரையும், அவரது அண்ணன் மனைவி ஆனந்தியையும் பிரவீனா தாக்கியுள்ளார். இதனால் கள்ளத் தொடர்பு இடையூராக இருந்ததால் இருவரும் பிரவீனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
   
இதன்படி ஆனந்தியின் அக்கா மகன் தீபக் என்பவர் மூலம் கூலி படையை தயார் படுத்தியுள்ளனர். கொலை செய்வதற்கு ரூ. 2 லட்சம் கூலி பேசி ரூ 1.70 லட்சம் முன்பணத்தை ராஜ்குமார் தனது அண்ணி ஆனந்தி மூலம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட  திருப்பத்தூர் ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் தீபக் (19), தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜெகன் மகன் சந்தோஷ்பாபு  (எ) சஞ்சய் (19), சுரேஷ் மகன் சரண்குமார் (19), மூர்த்தி மகன் லக்கி (எ) லட்சன் (19), அல்லாஹ பாக்ஸ் மகன் பப்லு (22) ஆகியோர் கடந்த 22ம்தேதி ஒரு காரில் வந்துள்ளனர். 

அவர்கள் திட்டமிட்டபடி ராஜ்குமார் அவரது மனைவி பிரவீனா டூலரில் அழைத்து வந்தபோது வழிமறித்து பிரவீனாவை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த தாலிக்கொடி இரண்டரை பவுன் மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளிடம் இருந்த தங்க நகை மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கூலிபடை வைத்து கொலை செய்த கணவன் ராஜ்குமார், அவரது அண்ணி ஆனந்தி மற்றும் கூலிப்படையினர் 5 பேர் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Perambalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment