Advertisment

பேரறிவாளன் விடுதலையில் சோனியா குடும்பம் & ஸ்டாலினுக்கான மரியாதைக்கு இடையில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

பேரறிவாளன் விடுதலையை வரவேற்கும் ஸ்டாலின்; மெளனம் காக்கும் சோனியா குடும்பம்; எதிர்ப்பு நிலைப்பாட்டில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
பேரறிவாளன் விடுதலையில் சோனியா குடும்பம் & ஸ்டாலினுக்கான மரியாதைக்கு இடையில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

Manoj C G

Advertisment

Perarivalan: From flaying ruling to silence on Stalin bid to respecting Gandhis, Congress walks a tightrope: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலைவழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக விமர்சித்து வருவது, ​​கடந்த காலங்களில் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக அறிக்கைகள் வெளியிட்ட சோனியா காந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான திமுக, பேரறிவாளன் விடுதலையை வரவேற்றதோடு, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலின், பேரறிவாளனைச் சந்தித்துக் கட்டித் தழுவியது, ராஜீவ் கொலைவழக்கின் சதிக் கோணத்தை விசாரித்த ஜெயின் கமிஷனுக்குப் பிறகு தி.மு.க அமைச்சர்களை அவரது அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்ததற்காக ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு 1997ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை காங்கிரஸில் உள்ள பலர் நினைவு கூர்ந்தனர்.

பேரறிவாளனுக்கு ஸ்டாலினின் அன்பான வரவேற்பு குறித்து காங்கிரஸின் மவுனம், திமுகவும், ஸ்டாலினும் முன்பை விட தற்போது காங்கிரஸுடன் நெருக்கமாகிவிட்டனர் என்பதை பறைசாற்றுகிறது. உண்மையில், நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநிலங்களின் தனித்துவமான அடையாளத்தை "தாக்குதல்" செய்வதாக குற்றம் சாட்டும் போதெல்லாம் ராகுல் காந்தி திமுகவைக் குறிப்பிடுகிறார்.

சோனியா காந்தி குடும்பத்தின் முரண்பாடான நிலைப்பாட்டை மீறி பேரறிவாளனின் விடுதலைக்கு காங்கிரஸின் எதிர்ப்பு வேண்டுமென்றே நிலைநிறுத்தப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் கட்சி "நிறுவன" நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். ராஜீவ் கொலையாளிகளை சோனியா காந்தி குடும்பத்தினர் மன்னிக்க முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். சோனியா காந்தி குடும்பத்தினர் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். ஆனால் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு வேறுபட்டது. அதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.

உண்மையில், ராஜீவ் படுகொலை வழக்கில் சோனியா காந்தியின் நிலைப்பாடு 1991ல் இருந்து மாறியது. சோனியா காந்திக்கும் பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கான முதல் அறிகுறிகள் ஜெயின் கமிஷன் விசாரணையில் வெளிப்பட்டன. அப்போது அரசியலில் இல்லாத சோனியா, ஜெயின் கமிஷன் விசாரணையின் மெதுவான முன்னேற்றத்தால் அதிருப்தி அடைந்தார். 1995 ஆம் ஆண்டில், அமேதிக்கு பயணம் செய்தபோது, ​​அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். கமிஷனின் விசாரணையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கலந்துகொள்வது வழக்கம். காங்கிரஸில் உள்ள நரசிம்மராவின் எதிர்ப்பாளர்களும் அவருக்கு எதிரான சோனியா காந்தியின் விரோதத்தைத் தூண்டுவதில் பங்கு வகித்தனர். 1996ல் கட்சி ஆட்சியை இழந்தவுடன் நரசிம்மராவ் ஓரங்கட்டப்பட்டார்.

1997 ஆம் ஆண்டின் இறுதியில் குஜ்ரால் அரசாங்கத்தை காங்கிரஸ் கவிழ்த்ததால், ​​அவர் ராஜினாமா செய்தார், அப்போது சீதாராம் கேஸ்ரி காங்கிரஸ் தலைவராக இருந்தார். கட்சி அளித்த ஆதரவை சில மாதங்களுக்குள் திரும்பப் பெறுவதற்கு கட்சியின் ஒரு பிரிவு எதிராக இருந்ததால், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸூக்கு பல நாட்கள் ஆனது. அந்த ஆண்டின் தொடக்கத்தில், எச் டி தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான ஆதரவையும் காங்கிரஸ் கட்சி திரும்பப் பெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சோனியாவின் பகைமையின் அறிகுறிகள் 1999 இல் கூட காணக்கூடியதாக இருந்தது, ஆனால் தீவிர அரசியல் பயணம் அதிலிருந்து அவரை மாற்றியது. ஏப்ரல் 1999 இல், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்ற பிறகு, அப்போதைய அதிமுக தலைவர் மறைந்த ஜெ ஜெயலலிதாவை தேநீர் விருந்தில் சோனியா சந்தித்தார். அப்போது மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை சரிபார்க்கத் தவறியது குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், 1999-ம் ஆண்டு, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தம், முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஸ்ரீஹரன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வலியுறுத்தி சோனியா அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில், மாநில அமைச்சரவையின் பரிந்துரை மற்றும் சோனியாவின் பொது முறையீட்டின் அடிப்படையில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக கவர்னர் ஆயுள் தண்டனையாக மாற்றினார். அவர்களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு எழுதப்பட்ட சோனியாவின் கடிதம், ஆகஸ்ட் 2011 இல் அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

2004ல் திமுக மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான உறவுகளும் மாறியது. 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு அங்கமாக காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், 2004ல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியின் பங்காளியாக திமுக ஆனது. உண்மையில் இந்தக் கூட்டணியை முற்போக்குக் கூட்டணி என்று சொல்லப் பரிந்துரைத்தவர் கருணாநிதி.

மார்ச் 2008 இல், வேலூர் மத்திய சிறையில் நளினியைச் சந்தித்தார் பிரியங்கா. அப்போது பிரியங்கா கூறுகையில், இது ஒரு தனிப்பட்ட வருகை, "நான் முற்றிலும் எனது சொந்த முயற்சியில் இந்தச் சந்திப்பை மேற்கொண்டேன்" என்றும் "இந்த சந்திப்பு மதிக்கப்பட்டால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றும் கூறியிருந்தார். மேலும், "எனக்கு கோபம், வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கை இல்லை, என் வாழ்க்கையில் இதுபோன்ற எந்த சக்தியையும் அனுமதிக்க மறுக்கிறேன். நளினியை சந்தித்தது நான் அனுபவித்த வன்முறை மற்றும் இழப்பை சமாதானப்படுத்துவதற்கான வழியாகும்,” என்றும் பிரியங்கா கூறினார்.

ராகுலும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். 1998 இல், லண்டனில் ஒரு உரையாடலின் போது, ​​அவர் கூறினார், “நான் நேசித்தவர்கள் கொல்லப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். என் தந்தையைக் கொன்றவர் கொல்லப்படுவதையும் பார்த்திருக்கிறேன். மேலும் யாழ்ப்பாணக் கடற்கரையில் திரு பிரபாகரன் (புலிகளின் தலைவர்) கிடப்பதைப் பார்த்தபோதும், அவர் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்தபோதும், அவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்தபோதும், என் தந்தையை அவருடைய இடத்தில் பார்த்ததால், அவர் மீது பரிதாபப்பட்டேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் அவருக்காக வருந்தினேன், ஏனென்றால் நான் அவருடைய குழந்தைகளை என் இடத்தில் பார்த்தேன்… எனவே, நீங்கள் வன்முறையால் தாக்கப்படும்போது, ​​​​அதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​அது உங்கள் மீது முற்றிலும் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்று கூறினார்.

சோனியா காந்தியின் நிலைப்பாட்டை கட்சி மதிக்கிறது, ஆனால் ஒரு நிறுவனமாக பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிப்பதில் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். “எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடியாது. இது கட்சியின் நிலைப்பாடு. எந்த முரண்பாடும் இல்லை. குடும்பத்திற்கு ஒரு தனிப்பட்ட பார்வை உள்ளது. கட்சிக்கு ஒரு பார்வை உள்ளது. அதை அவர்களும் புரிந்துகொள்கிறார்கள்” என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து சோனியா காந்தி குடும்பத்தினர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “அவர்கள் கட்சியை ஒரு நிலைப்பாட்டை எடுக்க அனுமதித்துள்ளனர். மேலிடத்தின் அனுமதி பெறாமல் ரன்தீப் சுர்ஜேவாலா அவ்வாறு கூறியிருக்க முடியாது” என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார். உண்மையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் சுர்ஜேவாலாவின் செய்தியாளர் சந்திப்பு, பிரியங்கா கலந்துகொண்ட AICC பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு வந்தது. “கூட்டம் நடந்து கொண்டிருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது,” என்று ஒரு தலைவர் கூறினார்.

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். பயங்கரவாதம், பிரதமர் படுகொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இப்படி விடுதலை செய்யப்பட்டால், இந்த நாட்டில் சட்டத்தின் மகத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் யார் நிலைநாட்டுவார்கள்? என்று சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறினார். ராகுலும் பிரியங்காவும் தங்களுடைய சொந்த மனிதாபிமான வழியில் “தனிமனிதர்களாக முன் வந்து ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மீது எந்த தீய எண்ணமும் இல்லை என்று கூறியுள்ளனர். ஒரு காங்கிரஸ்காரராகவும், ஒரு குடிமகனாகவும் குடும்பத்தில் எந்த தீய எண்ணமும் இருக்கக்கூடாது என்று நான் உணர்கிறேன்… ஆனால் அது இந்த நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மாற்றாது. நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு இன்று பிரதமர் மோடிக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: காங்கிரஸ் ‘பிக் டாடி’ இல்லை; மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புக்கு ராகுல் காந்தி விளக்கம்

ஒருபுறம் சோனியா காந்தியின் மன்னிப்பை உன்னதமான செயலாகக் காட்டி, மறுபுறம் அதற்கு நேர்மாறான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகக் கருதப்படலாம்.

பேரறிவாளனை ஸ்டாலின் சந்திப்பதில் காங்கிரஸின் மவுனம் குறித்து, சில கட்சித் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் இப்போது திராவிடக் கட்சியுடன் பிரச்சினை செய்ய முடியாது என்பதை கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. ஸ்டாலினும் ராகுலும் அன்பான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உண்மையில், 2019 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுலை முதலில் முன்மொழிந்தவர் ஸ்டாலின்தான்.

லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல், தி.மு.க. குறித்து குறிப்பிட்டார். காங்கிரஸின் சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் மாநிலக் கட்சிகள் குறித்து அவர் கூறிய கருத்து "தவறாகக் கருதப்பட்டது" என்று வாதிட்ட ராகுல், பிஜேபி-ஆர்எஸ்எஸ் உடன் ஒரு சித்தாந்தப் போர் உள்ளது என்றும், "இது ஒரு தேசிய கருத்தியல் போர். நிச்சயமாக, நாங்கள் மாநிலக் கட்சிகளை மதிக்கிறோம்... எடுத்துக்காட்டாக, திமுக ஒரு தமிழ் அரசியல் அமைப்பாக, ஆனால் காங்கிரஸ் தேசிய அளவில் சித்தாந்தத்தைக் கொண்ட கட்சி, என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India Stalin Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment