முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை, சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலையை அரசியல் கட்சிகளும், மக்களும் மிகழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், பேரறிவாளனை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். .பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த பொழுது கண்ணீர் ஆறாக போனது போல, தற்பொழுது கொலையாளிகள் விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும் பொழுது இதயத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருகிறது, எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இறப்புக்கு நீதி வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி குற்றவாளி தான்.அவரால் கடவுள் ஆக முடியாது என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil