/indian-express-tamil/media/media_files/gxLxPnVlcGiLRigtxbKB.jpg)
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மேயர், மற்றும் அரசு அதிகாரிகள் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 17, 2024
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும்… pic.twitter.com/TEhi2IqueV
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.