வருமான உச்ச வரம்பு ரூ8 லட்சம் ஆக்குக: தந்தை பெரியார் தி.க போராட்டம் அறிவிப்பு

வருமான வரித்துறையின் அலுவலகம் முன்பு வரும் 16 ஆம்தேதி சென்னை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்,தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

வருமான வரித்துறையின் அலுவலகம் முன்பு வரும் 16 ஆம்தேதி சென்னை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்,தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
வருமான உச்ச வரம்பு ரூ8 லட்சம் ஆக்குக: தந்தை பெரியார் தி.க போராட்டம் அறிவிப்பு

வருமான வரித்துறையின் அலுவலகம் முன்பு வரும் 16 ஆம்தேதி சென்னை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்,தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Advertisment

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

ரூபாய் 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு இருப்பதால் வருமான வரி வரம்பை ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் ஆக மத்திய அரசு உயர்த்த கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக வரும் 16ஆம் தேதி சென்னை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

publive-image

மத்திய அரசு அறிவித்துள்ள உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உயர் சாதி ஏழைகளுக்கு தரப்பட்ட 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்து இருப்பதன் மூலம் உயர் சாதியில் ஏழைகளுக்கு வரையறுக்கப்பட்ட மாத வருமானம் ரூபாய் 66,000 ஆண்டுவருமானம் 8 லட்சம் என்பதையும் உச்சநீதிமன்றம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

ஆனால், இந்திய ஒன்றிய அரசின் வருமான வரித்துறை தனிநபர் வருமானத்தில் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரி வரம்பை நிர்ணயித்துள்ளது

publive-image

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரூபாய் 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பரம ஏழைகளாக ஒன்றிய அரசு அறிவித்து வருமான வரி வரவை 8 லட்சமாக உயர்த்தக்கோரி வரும் 16 .11. 2022 புதன்கிழமை 11 மணிக்கு சென்னை மற்றும் கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: