Advertisment

''அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க உறுதியேற்போம்'' - த.வெ.க தலைவர் விஜய்

''அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க உறுதியேற்போம்'' என த.வெ.க தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
tvk

தவெக தலைவர் விஜய் பதிவு

பெரியாரின் 51-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படம் மற்றும் சிலைக்கு ஏராளமான் அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் தவெக தலைவர் விஜய் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்" என்றார்.

Advertisment
Advertisement

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Periyar Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment