பகுத்தறிவுச் சுடர் இனி உலகமெங்கும் ஒளிரும்: ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் உருவப்படம் திறந்து வைத்து ஸ்டாலின் பெருமிதம்

அறிவு, மனித உரிமைகள் மற்றும் மாண்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை நான் திறந்து வைப்பது, என் வாழ்நாள் கௌரவம்

அறிவு, மனித உரிமைகள் மற்றும் மாண்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை நான் திறந்து வைப்பது, என் வாழ்நாள் கௌரவம்

author-image
WebDesk
New Update
M K Stalin Periyar

Periyar’s rational light now shines across the world: TN CM after unveiling portrait in Oxford

"தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடர் இப்போது உலகமெங்கும் பரவி ஒளிர்கிறது. அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கிய சுயமரியாதை இயக்கம், சுதந்திரத்தை மறுவரையறை செய்து, சங்கிலிகளை அறுத்து, கண்ணியத்தை உயர்த்தியது" - இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறிய வார்த்தைகள் இவை.

Advertisment

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து சென்றுள்ள ஸ்டாலில்ன், செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய ஸ்டாலின், "அறிவு, மனித உரிமைகள் மற்றும் மாண்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை நான் திறந்து வைப்பது, என் வாழ்நாள் கௌரவம். பெரியாரின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் இப்போது பிரகாசிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று,” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்த ஓவியத்தை வரைந்தவர் பிரபல இந்திய கலை இயக்குநர் மற்றும் ஓவியர் தோட்டா தரணி.

Advertisment
Advertisements

சுயமரியாதை இயக்கம், எப்படி சாதி, மத அடிப்படைவாதங்களை உடைத்து, கண்ணியத்தை மீட்டெடுத்தது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில், “பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!

ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!

சமத்துவம் போற்றுவோம்! 
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!”  என்று பதிவிட்டுள்ளார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: