பெரியார் சிலை உடைப்பு: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என முழக்கங்களுடன் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணரை விமர்சித்துப் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. அதனால் தற்போது பெரியார் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அதோடு, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டரிலும் பெரியார் சிலை உடைப்பு குறித்த ஸ்டாலினின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“தந்தை பெரியார் சிலையை சிதைத்து, வன்முறையை விதைக்கும் காலிகள் மீது கடும் நடவடிக்கை தேவை”https://t.co/mxCASjAfFY
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை. pic.twitter.com/KdjF1N3Qho
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) April 8, 2019