பெரியார் சிலை மீது காவிசாயம் – தலைவர்கள் கண்டனம், ஒருவர் சரண்

தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது

By: July 17, 2020, 3:24:30 PM

கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை 5.30 மணியளவில் அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர். இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் அங்கு வந்த மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் தெற்கு உதவி ஆணையர் செட்டிக் மனுவேல் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சுந்தராபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலர் அவமதிப்பு: ஸ்டாலின் கண்டனம்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,


என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.

அதனால் அவர் பெரியார்!

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்” என்று கூறி உள்ளார்

பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி பெயிண்ட் ஊற்றி சென்ற சம்பவத்திற்கு சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூலை 18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

அதேபோல், திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனப் பதிவில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!

காவிச்சாயம் பூசப்பட்ட பெரியார் சிலை

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என கூறி உள்ளார்.

7 நாள்… 700 கிலோமீட்டர்… 73 வயது: சென்னை டு நாங்குநேரி சைக்கிளில் பயணித்த ‘இளைஞர்’

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘இது ஒரு ஈனச் செயல். இப்படிப்பட்ட செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கறாரான நடவடிக்கைப் பாயும். இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தலைவர்களும் பின்பற்றப்படுவதற்கு உரிமையுண்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்ட வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாது’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அருண்கிருஷ்ணன் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Periyar statue dishonoured with saffron paint in coimbatore covai news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X