புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி அருகே அமைந்துள்ள விடுதி கிராமத்தில், தந்தை பெரியாரின் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் இந்தச் சேதத்தை நடத்திவர்களை கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க செயல் தலைவர் எச். ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் லெனின் சிலை போலவே தமிழகத்தில் பெரியார் சிலைகளும் தகர்க்கப்படும் என்று வெளிவந்த சர்ச்சைக்குரிய கருத்து தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடந்து பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பெரியார் சிலை உடைக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுக எம்பி கனிமொழி பெரியார் சிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/1-1-280x300.png)
,
மாலை 3.00: புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதியம் 2.00 தலைவர்கள் சிலை உடைப்பது, வன்முறையை தூண்டும் பாஜகவின் செயல் தமிழகத்தில் எடுபடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து.
மதியம் 1.30: புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்
மதியம் 1 .00: பெரியார் சிலையை சேதப்படுத்தியவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதியம் 12.00 : பெரியார் சிலை மீது கை வைத்த காட்டுமிராண்டி கும்பல் தண்டிக்கப்பட வேண்டும். பெரியா சிலைக்கு திமுகவினர், பாதுகாப்பு வழங்குவார்கள். பெரியார் சிலை மீது கைவைக்க நினைக்கும் கோழைகளை விரட்டி அடிப்போம். என்று ஸ்டாலின் அறிக்கை .
காலை 11.30: புதுக்கோட்டையில் பெரியார் சிலை தாக்கப்பட்டது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. தமிழக அரசு ரத யாத்திரைக்கு தமிழ்நாட்டில் பெரியார் சிலை தாக்கப்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று சீமான் தெரிவித்தார்.
காலை 11.10: பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம்
காலை 11.00: புதுகோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து, சென்னையில் உள்ள சிம்சனில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.