தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள்

Periyar death anniversary : தந்தை பெரியாருக்கு , 1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது.

periyar, thanthai periyar, death anniversary, erode, vaikkom, intercaste marriage, dmk, m k stalin
periyar, thanthai periyar, death anniversary, erode, vaikkom, intercaste marriage, dmk, m k stalin, பெரியார், தந்தை பெரியார், நினைவு தினம், ஈரோடு, வைக்கம், கலப்பு திருமணம், திமுக, ஸ்டாலின், டுவிட்டர்

தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி, செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

ஒரு மனிதன், ஒரு சித்தாந்தம்: ஈ.வெ.ராமசாமி பெரியாரின் முக்கியத்துவம்

1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.

தந்தை பெரியார் பற்றி தெரிஞ்சுக்குவோமா..

1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது.

தந்தை பெரியாருக்கு , 1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது.

உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞர் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது. ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை! அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க என பதிவிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Periyar thanthai periyar death anniversary dmk stalin

Next Story
சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர்… நாட்டைவிட்டு வெளியேற வற்புறுத்தல்CAA Protest IIT Madras German student Told to exit India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com