Periyar University UG and PG Exams Result Declared In periyaruniversity.ac.in :பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம். விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை (யு.ஜி., பி.ஜி.,) வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் periyaruniversity.ac.in என்கிற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டன.
பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது. பின்னர் அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 82 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளை நிர்வகிக்கிறது. இந்தப் பகுதியில் பிஜி, யுஜி பயின்ற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியிருந்தார்கள்.
இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.
விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Periyar university november result in periyaruniversity ac in
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு