சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. உணவகம், ஓய்வு அறை, வாகன பார்கிங் வசதிகள் உள்ளன.
பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது. நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாகவும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு நேற்று பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“