தாம்பரம் ரயில் நிலையத்தில் “தேஜஸ்” எக்ஸ்பிரஸ் நின்று செல்வதற்கான நடவடிக்கையை ரயில்வே அமைச்சர் எடுப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும், ரயில்வே தடத்தில் பணிபுரியும் மக்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரை சந்தித்து பேசியபோது, சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் எஸ்பிரெஸ்ஸானது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.
ஆனால், ரயில்வே போர்டு இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனை நிறைவேற்ற ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமாறு வலியுறுத்தினார்.
மேலும், ரயில்வே தண்டவாளத்தில் பணிபுரியும் போது மரணிக்கும் பணியாளர்களை தடுப்பதற்காக, உடனடியாக இரட்சக் என்ற பாதுகாப்பு கருவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil