முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதியின் பேனா வடிவத்தில் சென்னையில் நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தனர்.
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே நிறுவப்படும் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு’ ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், இந்த நினைவு சின்னத்தை கட்டுவதற்கு முன்பாக, ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil