மதுரை விமான நிலைய பேருந்தில் பயணித்தபோது துரோகத்தின் அடையாளம் ஈ.பி.எஸ்., என்றபடி நேரலை செய்து அவதூறாக பேசியவர் கைது.

அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார்.
அவருடன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து, சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த யோகேஸ்வரன் என்பவர், விமான நிலைய பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தன்னுடைய முகநூல் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியுள்ளார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரது செல்போனை உடனடியாக பறித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து யோகேஸ்வரனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil