scorecardresearch

பிணையில் வெளியே வந்த கொலை குற்றவாளியை கொலை செய்த மர்ம கும்பல்

கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பிஜு(40). இந்து அமைப்பை சேர்ந்த இவர் .ராம் நகரில் சோடா கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நிதீஷ்குமாரை – ராம் நகரைச் சேர்ந்த சிலர் கத்தியால் குத்தினர்.

இதையடுத்து நிதீஷ்குமார் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த அவரது ஆதரவாளர்கள் கடந்த 2020″ஆம் ஆண்டு காந்திபுரம் பகுதியில் அவரைக் வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  அருண் பிரசாத்  –  விவேக் பிரபு –  இளையராஜா –  அரவிந்த் – பிரவீன் –  கார்த்திக் –  ஆறுமுகம் –  கோபால் – சக்தி பாண்டி –  பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிஜி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சக்தி பாண்டி  என்பவர் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள இளநீர் கடை முன்பாக நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல்கள் சக்தி பாண்டியை அறிவாளால்  வெட்டியுள்ளனர். உயிர் தப்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தய சாலை  போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கி செல்கள் கைப்பற்றப்பட்டு, மர்மகும்பல்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Person who came on bail killed by unknown gang in kovaii

Best of Express