புதிய மின்சார இணைப்பு கோரும் நபர்கள் மின்சார கசிவு காப்பு சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், “இந்தச் சாதனத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை காணப்படும். இதனை வீடுகளில் மக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்றார்.
இந்தச் சாதனத்தின் பெயர் “ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்” ஆகும். இந்த கருவி தொடர்பான பயன்கள் குறித்த விழிப்புணர்வை 2021 முதலே தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்திவருகிறது.
இந்த கருவியானது மின்கசிவை கண்டுப்பிடித்தால் ஆட்டோமெட்டிக் ஆக பீஸ் போ செய்துவிடும்” என்றார். பொதுவாக மின்சாரங்கள் சில நேரங்களில் லீக் ஆகி விபத்தை ஏற்படுத்துகின்றன.
இதில் இருந்து நுகர்வோரை காக்க இந்தச் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களிலேயே நாமக்கல்லில் லேப்டாப் சார்ஜ் செய்த பெண் மருத்துவர் சரணிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் மின் மோட்டார் ஆன் செய்த 70 வயது மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“