/indian-express-tamil/media/media_files/NE6YfEZDkINTEQt1HX3i.jpg)
கருணாநிதியை இகழ்வோரை காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
“ஈனப் பிச்சைக்காக கலைஞரை இகழும் ஞான சூனியங்கள்” என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடுமையாக தாக்கி கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பீட்டர் அல்போன்ஸ், “தலைவர் கலைஞர் தான் வாழ்ந்த காலத்து சீர்கேடுகளையும், மூடப்பழக்கங்களையும்,சமூக அநீதிகளையும் அழித்தொழித்த ஒரு யுக புருஷர்..
அவரை வாழ்த்தியவர்களும் உண்டு!தூற்றியவர்களும் உண்டு! ஆனால் யாராலும்,எக்காலத்திலும் தவிர்க்கப்படமுடியாதவர்.. இந்திய நாட்டின்,தமிழகத்தின் இரண்டு நூற்றாண்டு வரலாற்றின் ஒவ்வொரு பெரும் திருப்பத்திலும் அவர் தன் கால் தடம் பதித்தவர்..
அவரது வார்த்தைகளில் சொன்னால் “தன் மீது எறியப்பட்ட மலத்தையும், சாணத்தையும், காரி உமிழப்பட்ட எச்சிலையும், இழிந்ததுகள் தன்மேல் கழித்த சிறுநீரையும் தன் காலால் உண்டு, உடலால் செரித்து , உள்ளத்தில் வாங்கி ,உணர்வால் ஓங்கி வளர்ந்தவர்..
உயரப்பறக்கும் கழுகின் கழுத்தில் அமரும் கரிச்சான் குஞ்சை கழுகு என்றுமே காயப்படுத்தியதில்லை. கழுகு பறக்கும் காற்றின் வேகமே அதன் உயிர் குடிக்கும்..
மனநிலை திரிந்த ஞான சூனியங்கள் கலைஞரை இகழ்ந்து இனப்பகைவர்கள் தரும் ஈனப்பிச்சைக்காக விழுந்துகிடக்கின்றன!
தலைவர் கலைஞர் தான் வாழ்ந்த காலத்து சீர்கேடுகளையும், மூடப்பழக்கங்களையும்,சமூக அநீதிகளையும் அழித்தொழித்த ஒரு யுக புருஷர்..
— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 12, 2024
அவரை வாழ்த்தியவர்களும் உண்டு!தூற்றியவர்களும் உண்டு! ஆனால் யாராலும்,எக்காலத்திலும் தவிர்க்கப்படமுடியாதவர்..
இந்திய நாட்டின்,தமிழகத்தின் இரண்டு நூற்றாண்டு… pic.twitter.com/UeJ3DmFSNz
கடல் உள்ள வரை, தமிழ் மண் உள்ளவரை கலைஞரின் புகழ் வாழும்” எனக் கூறி மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வின் ஐ.டி. விங் ஐ.டியை டேக் செய்துள்ளார்.
அண்மையில் கருணாநிதி தொடர்பான பாடலை பாடியதற்கான நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் பிரபல யூட்யூபருமான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சாட்டை துரைமுருகனின் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக மூத்தத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.