கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலை செம்மேடு பகுதியில் ஈசா யோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவம்பட்டி பகுதியில் மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ரவிகுமார் கூறுகையில் அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும் இடுகாடும் இருப்பதாகவும் ஈசாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும் இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க : ஈசா யோகா பயிற்சிக்கு வந்த பெண் மாயமான வழக்கு; 5-ம் நாளாக போலீசார் தேடுதல் வேட்டை
எனவே மாவட்ட நிர்வாகம் ஈசாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் அங்கு ஈசாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் இக்கரை போலுவம்பட்டியில் அமைய உள்ள ஈசா மின் மயானத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“