கோவை மாவட்டத்தில் தடை செய்யபட்ட குட்கா,புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பதாக கூறி கடைகளை சீல் வைத்ததை நீக்கி விழிப்புணர்வு தர வலியுறுத்தி வியாபாரிகள் சங்க பேரவை கோவை மாநகரம் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்கு மற்றும் கடையினை அடைத்து சீல் வைத்தது நீக்க கோரி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வியாரபாரிகள் சங்க தலைவர் சுதர்சன், “தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவையின் உறுப்பினர்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா,புகையிலை தடை செய்த பொருட்கள் என்ன என்பது தெரியாமல் வியாபாரிகள், வெளிச்சந்தையில் எளிதில் கிடைப்பதால் அதனை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
அதனால் காவல் துறை வியாபாரிகள் மீது வழக்கு போட்டு கடையில் சீல் வைத்து வருகிறார்கள் தமிழ்நாடு அரசு மூலம் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு முகாம் நடத்தி வியாபாரிகளுக்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன என்பதை தெளிவாக வியாபாரிகளிடம் கூறி வழிகாட்டுதலை காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வியாபாரிகள் தற்சமயம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா,குட்கா,புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்ததாக கூறி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை உடனடியாக நீக்கி கடைகளில் போடப்பட்ட சீல்களை அகற்றி வியாபாரிகள் கடைகளை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வழக்கு போட்ட கடையினை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு,அவர்களின் குழந்தைகளின் பள்ளி படிப்பு போன்றவை பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது அதனால் தமிழக அரசு எங்கள் வியாபார சங்கத்தினை கலந்து ஆலோசித்து போதிய விழிப்புணர்வு வழங்க கேட்டுக்கொள்கிறோம்
மேலும் எங்கள் வேண்டுதலை உடனடியாக பரிசீலனை செய்து சிறிய வியாபாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கேட்டு மனு அளித்தாக தெரிவித்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“