Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43- காசுகளுக்கும், டீசல் ரூ.94.47-காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.03, டீசல் விலை ரூ.3.04 உயர்ந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்!
முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக, வியாழன் மாலை துபாய் சென்றார். துபாய் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முன்னணி தொழில் முனைவோர்களை ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil News LIVE Updates:
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திடீர் பயணம்!
இந்தியாவுக்கு திடீர் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
வெடிக்கும் பைடன் – புதின் மோதல்!
நேட்டோ உச்சிமாநாட்டில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும். உக்ரைன் போரில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ பதிலடி கொடுக்கும். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இதற்கிடையே, நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். புதினின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
ரஷ்யாவுக்கு எதிராக, ஐ.நா. பொதுசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 140 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்புக்கு ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, சீனா வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
தமிழகத்தின் திண்டுக்கல் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதில் இரண்டு மணி நேரத்திற்குள் மூன்று சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மூன்று மைக்ரோ நிலநடுக்கங்களின் அளவு ரிக்டர் அளவுகோலில் 1.2 முதல் 1.5 வரை இருந்தது, இந்த நிலநடுக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் உணரப்பட்டது
உக்ரைனில் தனது இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முழுமையாக “விடுதலை” செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இப்போது உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தின் 93% மற்றும் டொனெட்ஸ்க் மாகானத்தின் 54% கூட்டாக உருவாக்கும் இரண்டு பகுதிகளை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
தமிழகத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தற்போது 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்வு என நிதி மசோதா மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது 2021-22 ஆம் ஆண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ₨1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது பதிவுத்துறையில் இதுவரை ₨13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
டெல்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். உக்ரைன் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக 5வது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மத்திய நிதி ஆணையத்தின் கீழ் ரூ.799 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் நடந்த கலவரம் குறித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினர் ரூபா கங்குலி, திரிணாமூல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு நாளும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டு அவர் கண்ணீர் விட்டார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. ஊட்டி கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மே7 மற்றும் 8ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவிலும், மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவிலும் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறை இணை அமைச்சருடனான சந்திப்பு தமிழக – அமீரக உறவைப் போல வலுவானதாக அமைந்தது. 'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரேனிய ராணுவ வீரர்களை அடையாளம் காண ஃபேஸ் ரிகாக்னிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கிளியர் வியூ ஏஐ என்ற நிறுவனம் உக்ரைன் அதிகாரிகளுக்கு இச்சேவையை இலவசமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பாதக் ஆகிய 2 பேர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.
சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் கோரி மீரா மிதுன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கில் ரஷ்ய படைகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. அங்கு பதுங்கியிருந்த 300 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் 2வது முறை முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை ஷத்திரியர் என்ற பிரிவு கிடையாது மனு தர்மத்தை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
பன்னீர்செல்வன் எழுதிய 'Karunanidhi A Life' புத்தகத்தை அமீரக அமைச்சருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை காண, ரசிகர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், ரசிகரிடம் விசாரணை செய்து வருகின்றன்ர்.
நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், அபராதம் மட்டும் விதிக்காமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 காலிப் பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படையெடுத்து போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் பகுதியில் நாடக அரங்கில் ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதல் 300 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை என மக்களவையில் மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் அளித்துள்ளார்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவிட்டது. இந்த வழக்கில் முறையாக ஆஜராகாத அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை கைது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் செய்தது.
அரசு ஊழியர்கள் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அவர்கள் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராத பட்சத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சாலையோர உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தும் ஒப்பந்தபுள்ளியில், அரசு பேருந்துகள் நிற்குமிடங்களில் சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனை விதிக்கப்பட்ருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அசைவ உணவுக்கும் அனுமதி என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஏற்றுமதிக்கான தயார்நிலை குறியீடு 2021 அறிக்கையை வெளியிட்டது. இதில் தேசிய அளவில் தமிழகம் 4வது இடத்தை பிடித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உதகை மலர் கண்காட்சி, மே மாதம் 20ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் குறித்து பதிலளிக்க மறுத்ததால் மக்களவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா உயிரியல் பூங்காவில் புடின் என்று பெயரிடப்பட்ட 12 வயது ஆண் புலி உடல் நலக் குறைவால் உயிரிழப்பு
திடீர் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்செல்வி என்ற திருநங்கைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணி நியமன ஆணை வழங்கினார். ராணிப்பேட்டையை பூர்வீகமாக கொண்ட அவர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரை மணி நேரம் பயணிகள் தவிப்பு. மெமொ கொடுத்த டிக்கெட் பரிசோதகரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதி தொடர்ந்து பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நான்கு நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடப்பு நிதி ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் டி.டி.எஸ் மூலம் வசூல் செய்யப்பட்ட வருமான வரியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 125% கூடுதலானது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில், ரஹ்மத்துல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சையை சேர்ந்த ஜமால் இஸ்லாம் என்பவரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் பலியான வழக்கை உடனடியாக சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார். இந்த வழக்கில் 8 பேர் ஏற்கனவே கைதாகி உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில், 83 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 21,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது; ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொ.கீரனூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
உலகின் அனைத்து நாடுகளையும் இலக்காக வைக்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையே மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கான சர்வதேச டெண்டரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியது. 10 கி.மீ தூரத்தில் உயர்மட்ட பாதையாக அமைய உள்ள இத்தடத்தில் 9 ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார். தற்போது, தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவா்கள் தமிழகம் திரும்பினர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்கள், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வேன் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.