Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு!
தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது.. மு.க.ஸ்டாலின்!
ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்ற அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்யும் பாஜக, அதில் வெற்றி பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
IPL 2022: ஐபிஎல் போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் - 64, தவான் - 35 ரன்கள் எடுத்தனர். 190 ரன்கள் இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 96 ரன்கள் எடுத்தார்.
Tamil News LIVE Updates:
நிதியமைச்சர் பிடிஆர் சாடல்!
இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் 70% மாநிலங்களில் இந்தி தாய்மொழி கிடையாது. மும்மொழி கொள்கை என்பது பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நீடிக்குமா?
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
- 22:01 (IST) 09 Apr 2022குஷ்பூ, சுகாஷினி... முன்னணி நடிகைகளுடன் ஒரே மேடையில் ஸ்டாலின்!
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தென் மண்டலம் சார்பில் நடைபெற்ற தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில், குஷ்பூ, சுகாஷினி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
- 21:35 (IST) 09 Apr 2022வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது
- 20:58 (IST) 09 Apr 2022நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன் புகழாரம்
நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார்
- 20:35 (IST) 09 Apr 2022இம்ரான்கான் தலைமையில் இரவு 9 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம்
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் இரவு 9 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 20:15 (IST) 09 Apr 2022இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - பினராயி விஜயன்
இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி. இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்
- 19:04 (IST) 09 Apr 2022மாநிலங்களின் உரிமைக்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் உரிமைக்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும். மாநில உரிமையை காத்திட மாநில முதல்வர்கள் குழுவை அமைத்திட வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- 19:02 (IST) 09 Apr 2022ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல - மு.க.ஸ்டாலின்
ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல. 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்றுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என கேரளாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- 18:56 (IST) 09 Apr 2022நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி சட்டங்களை இயற்றுகிறது பாஜக - மு.க.ஸ்டாலின்
மாநில வளர்ச்சிக்கான திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுக்களை மத்திய அரசு கலைத்து விட்டது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி சட்டங்களை இயற்றுகிறது பாஜக என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- 18:46 (IST) 09 Apr 2022இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க பாஜக முயற்சி - மு.க.ஸ்டாலின்
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி நடக்கிறது. ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்
- 18:40 (IST) 09 Apr 2022மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும் என கண்ணூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்
- 18:39 (IST) 09 Apr 2022மலையாளத்தில் உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின்
கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையை தொடங்கினார். மத்திய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
- 18:28 (IST) 09 Apr 2022மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் பினராயி விஜயன் - ஸ்டாலின்
மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். எனக்கு வழிகாட்டும் முதல்வராக திகழ்கிறார். வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்
- 17:46 (IST) 09 Apr 2022கேரளாவில் மாநில சுயாட்சி மாநாடு; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்
- 17:31 (IST) 09 Apr 2022அமித் ஷாவின் இந்தி கருத்து - இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு
மாநிலங்களில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்க்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், ரஞ்சித் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
- 17:21 (IST) 09 Apr 2022பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் கொள்ளை
டெல்லியில் உள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ2.4 கோடி மதிப்பிலான பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16:41 (IST) 09 Apr 2022ஏப்ரல் 16இல் அதிமுகவின் 3ஆம் கட்ட உட்கட்சித் தேர்தல்
அதிமுகவின் 3ஆம் கட்ட உட்கட்சித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும். 25 மாவட்டங்களில் நடைபெறும் உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை
- 16:36 (IST) 09 Apr 2022அடுத்த 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு , நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16:34 (IST) 09 Apr 2022அடுத்த 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு , நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16:05 (IST) 09 Apr 2022கொரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு
தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்த சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள். கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுன் விலையை ரூ600லிருந்து ரூ225ஆக குறைத்தது சீரம். கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ1,200லிருந்து ரூ225ஆக பாரத் பயோடெக் குறைத்தது .
- 15:56 (IST) 09 Apr 2022"இந்தியால் இந்தியாவை இணைக்க முடியாது!" - வைகோ
இந்தி மொழியால் தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்குரியது, இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிப்பை தீவிரப்படுத்த முனைந்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது என வைகோ அறிக்கை
- 15:54 (IST) 09 Apr 2022கேரளாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 15:23 (IST) 09 Apr 2022'தமிழக மக்களுக்கு மட்டும் உதவுவது பிளவை ஏற்படுத்தும்' - தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவு ஏற்படும். இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- 15:14 (IST) 09 Apr 2022மதுக்கடைகளை மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அமைதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பி வலியுறுத்தல்
- 14:49 (IST) 09 Apr 2022குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து, பச்சை பயறு கொள்முதல்
குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து, பச்சை பயறு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நலையில், உளுந்துக்கு ₨63, பச்சைபயறுக்கு ₨72.75 குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
- 14:48 (IST) 09 Apr 2022கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த வழக்கு
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மானாமாதுரையை சேர்ந்த செல்வராணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தேசிய மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது.
- 14:47 (IST) 09 Apr 2022கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த வழக்கு
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மானாமாதுரையை சேர்ந்த செல்வராணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தேசிய மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது.
- 14:45 (IST) 09 Apr 2022இந்திய கடல் எல்லைப் பகுதியில் சிக்கிய ஈரான் நாட்டு கப்பல்
அந்தமான் அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு சிறிய ரக கப்பல் இந்திய கடலோர காவல் படையினரிடம் சிக்கியது. இந்த கப்பல் சென்னை துறைமுகம் அழைத்து வரப்பட்டது போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டதா? என கப்பலில் இருந்த 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
- 14:43 (IST) 09 Apr 2022இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? - கவிஞர் வைரமுத்து
வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம், தெற்கே வாழ வரும் வடவர் தமிழ் கற்கலாம் வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம்; இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல - என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- 14:43 (IST) 09 Apr 2022இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? - கவிஞர் வைரமுத்து
வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம், தெற்கே வாழ வரும் வடவர் தமிழ் கற்கலாம் வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம்; இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல - என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- 13:57 (IST) 09 Apr 2022இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது - ஒபிஎஸ்
உள்துறை அமைச்சர் அமித்ஷா "ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்த கருத்து பலரின் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்
- 13:38 (IST) 09 Apr 2022வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ் பதிவு
உள்துறை அமைச்சர் அமித்ஷா "ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்த கருத்து பலரின் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தமிழ் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " தமிழ்த்தாய் "ழ"கர சூலம் ஏந்தி நடனமாடுவதைப் போன்ற படத்துடன்..."இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!" என்ற பாரதிதாசன் பாடல் வரிகளுக்குக் கீழ் தமிழணங்கு என்று இடம்பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
- 13:20 (IST) 09 Apr 2022ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஆட்டோக்களில் மீட்டர்களை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை, மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- 12:40 (IST) 09 Apr 2022ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி
ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட சாலை தடுப்புச் சுவற்றில் மோதி பேருந்து விபத்து. யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
- 12:12 (IST) 09 Apr 2022ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக கோரி போராட்டம்
இன்று முதல் நாளை வரை தொடர் போராட்டம் இலங்கையில் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ள நிலையில் கால் பூங்காவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
- 12:11 (IST) 09 Apr 2022பாகிஸ்தான் நாடாளுமன்றம் மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு
இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 11:33 (IST) 09 Apr 2022சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பு
சென்னையில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது இருந்த மக்கள் தொகை 66.72 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு
- 11:31 (IST) 09 Apr 2022நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம்
இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் யாரும் நாடாளுமன்றம் வரவில்லை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் அறிவித்துள்ளார்.
- 11:29 (IST) 09 Apr 20226 ஆண்டுகளுக்கு பின் நிதிநிலை அறிக்கை தாக்கல்
சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வாருகிறது. ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் 3 டயாலிசிஸ் மையம் அமைக்கப்படும் என்றும் 30 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளுக்கு ரூ, 32.38 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- 11:05 (IST) 09 Apr 2022சென்னை வார்டு மேம்பாட்டு நிதி உயர்வு!
சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
- 10:49 (IST) 09 Apr 2022இலவச திட்டங்கள்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!
இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் தேர்தல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில்,இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவு. இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
- 10:35 (IST) 09 Apr 2022சென்னை பட்ஜெட் கூட்டம்.. அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு!
சொத்து வரி உயர்வை கண்டித்து, சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
- 10:21 (IST) 09 Apr 2022தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு!
சென்னை, நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதல்வட் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
- 09:59 (IST) 09 Apr 2022ஒடிசாவில் இருந்து 20,000 டன் நிலக்கரி வருகை!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4-யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து 20,000 டன் நிலக்கரி வந்துள்ளது. இதனால், மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
- 09:31 (IST) 09 Apr 2022180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும்!
பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலை. மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
- 09:31 (IST) 09 Apr 2022லஷ்கர் இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
- 09:10 (IST) 09 Apr 2022லஷ்கர் இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
- 08:59 (IST) 09 Apr 2022தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 08:45 (IST) 09 Apr 202218 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!
18 வயது மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 08:45 (IST) 09 Apr 2022வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!
கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
- 08:45 (IST) 09 Apr 2022சென்னை பட்ஜெட் இன்று தாக்கல்!
ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.