Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா?
இந்தியை மட்டுமே பேச வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? தமிழ்நாடு’ நம்பர் 1 மாநிலம் என்பதை எட்ட வேண்டும். துபாய், கேரளா, டெல்லி என எங்கு சென்றாலும் பாராட்டப்படும் அரசாக நமது அரசு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம் என்று செங்கல்பட்டு, மறைமலைநகரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tamil News Live Updates
பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்று புதிய பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pakistan became an independent state in 1947; but the freedom struggle begins again today against a foreign conspiracy of regime change. It is always the people of the country who defend their sovereignty & democracy.
— Imran Khan (@ImranKhanPTI) April 10, 2022
இதற்கிடையே, ”பாகிஸ்தானில் 1947-க்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு சதிக்கு எதிரான சுதந்திர போராட்டம் தொடங்கியுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்கள் மட்டுமே” என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ட்வீட் செய்துள்ளார்.
வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை.. ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் படங்களை போலதான் மலையாள படமும், மற்ற மொழி படங்களும். இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை. என்னிடம் ஒரு சீனர் வட இந்தியர்கள் நல்ல நிறமாக இருப்பதாகவும், தான் வட இந்திய படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார். அது என்னை மிகவும் பாதித்தது. கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த கதாப்பாத்திரங்களைக் கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம் நிறம்தான் பிடிக்கும் என தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
விரைவில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு வலியுறுத்தினேன் என்று கூறியுள்ள பிரதமர் மோடி உக்ரைனில் சிக்கிய மாணவர்களை கடும் சவால்களுக்கு இடையே மீட்டோம் என்றும், அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகளாக திகழ்கிறது ஆனால் தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்
சென்னையில் 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை, வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் என்று சொத்து உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ஷெபாஸ் ஷெரீப் இறைவன் 22 கோடி பாகிஸ்தான் மக்களை இன்று காப்பாற்றி உள்ளார் என்றும், பாகிஸ்தான் மக்கள் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடுவர் என்றும் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரோப்கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்து்ளது. விபத்தில் இருந்து இதுவரை 30 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 18 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறேன்;ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் அது நிகழாது என்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளில் “ரூ.210 கோடியில் கணினி ஆய்வகங்கள்” “ரூ.150 கோடியில் திறன் வகுப்பறைகள்” அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழ்நிலையில், அந்நாட்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னை, அதிமுக தலைமை அலுவகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு. பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திற்கு தலைவராக முதலமைச்சரும், துணைத் தலைவராக வனத்துறை அமைச்சரும் நியமனம். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், உதயசூரியன், ஐ.பி.செந்தில்குமா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் ரூ166.50 கோடியில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜாவுக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேரலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் ஆகும். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த 6 லட்சம் மாணவிகளின் உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் ஏப்ரல் 16 ஆம் தேதி அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், ஏப்ரல் 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து பிடிஐ கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது. 6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
எரிசக்தி ஆற்றல் சேமிப்பில் 85.4 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு அரசு முதலிடம் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் 1200 அடி உயர மலைப்பாதையில் 12 ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குளானது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயம்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மாநகரில் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால்,மக்கள் அவதியுற்று வருகின்றனர்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
நீர்ப்பிடிப்பிற்காகவும், களத்து மேடாகவும் பயன்படுத்தப்பட்ட நிலத்தை நத்தம் நிலமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் என வகை மாற்றம் செய்யக்கூடாதென தொடர்ந்த வழக்கில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியதை எதிர்த்து அதிமுக கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் தாக்கினர்
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்; வேறு யாராலும் ஆள முடியாது என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
ஜெகன் மோகன் அமைச்சரவையில், ஆந்திர மாநில அமைச்சராக நடிகை ரோஜா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் விஸ்வ பூசன் ஹரிச்சரண் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
நடமாடும் கோளரங்கம் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து செயல்படும் என்று உயர்கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு தயாரித்து வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை 4வது உரிமையியல் நீதிமன்றம்.
ஆந்திரா, அமராவத்தியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்தன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள். நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று அவையில் தெரிவிக்கப்பட்டது.
CUET நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் தனபால், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை, 1.9 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய பல்கலை.,களில் சேர நுழைவுத் தேர்வு என்ற ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது. பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
“ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதுபோல், தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்” என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திருவண்ணாமலை கோயிலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படுமா? என சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்விக்கு, வியாபார பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு நீக்கப்பட்டு முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். 1,700 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது-அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
விராலிமலையில் இசைப்பள்ளி தொடங்க அரசு ஆவன செய்யுமா? என அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் கேள்விக்கு, விராலிமலையில் தற்போதைக்கு இசைப்பள்ளி தொடங்கப்படாது; தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இசைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.
உ.பி. மாநிலம் காஜியாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் 3 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளித்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநில உரிமை – மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீப் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஷெரீப் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இம்ரான் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை எலன் மஸ்க் அண்மையில் வாங்கிய நிலையில், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலன் மஸ்க் சேரமாட்டார் என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் தகவல்!
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் 27.42% வாக்குகளும், மரின் லி பென், 24.92% வாக்குகளும் பெற்றுள்ளனர்!
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.